அன்பெனும் சாபமது அவர் கண்ணில் தெரிந்ததெனக்கு.
கலங்கிய கண்ணீரில் கரைந்தது என்னுள்ளம்.
முதுமையின் முழுமையில் இமைமுடி விழுகையில்
ஒருவேலை உணவிற்க்கு உழைக்கநினைக்கும் உயிரது.
கால் சிறிது நீட்டாது ஒரு ஓரத்தில் அமர்ந்து
நரைமுடியில் மறைந்த முகமதில் தெரிய
பசியின் தவிப்பு அவர் இசையதில் புரிய
மீட்டும் இசையில் தன் பசி அதனை மறக்க
ஆசை கொண்ட அவரது முகத்தில் - ஏக்கம்
அவை ஏற்றங்கள் அறியாமல் ஏற துடித்தது .
எட்டு திசையிலும் எட்டாத கண்ணீரை
துடைத்ததும் அந்த இசையின் வலிமைதான்.
இது பசியின் துயரமா? ஏழ்மையின் உயரமா?
- கிரிசேஷ் குமார்
கலங்கிய கண்ணீரில் கரைந்தது என்னுள்ளம்.
முதுமையின் முழுமையில் இமைமுடி விழுகையில்
ஒருவேலை உணவிற்க்கு உழைக்கநினைக்கும் உயிரது.
கால் சிறிது நீட்டாது ஒரு ஓரத்தில் அமர்ந்து
நரைமுடியில் மறைந்த முகமதில் தெரிய
பசியின் தவிப்பு அவர் இசையதில் புரிய
மீட்டும் இசையில் தன் பசி அதனை மறக்க
ஆசை கொண்ட அவரது முகத்தில் - ஏக்கம்
அவை ஏற்றங்கள் அறியாமல் ஏற துடித்தது .
எட்டு திசையிலும் எட்டாத கண்ணீரை
துடைத்ததும் அந்த இசையின் வலிமைதான்.
இது பசியின் துயரமா? ஏழ்மையின் உயரமா?
- கிரிசேஷ் குமார்