கடத்தும் கார்முகிலில் கரையும் கதிரிளவன்
மயங்கும் மனதுடன் தன்வியர்வையைச் சிந்த
மரக்கிளைகளை நனைக்கும் மழைத்துளிகள்
மெதுவாய் கீழ்நோக்கி படர்ந்து வந்து
முகத்தில் பட்ட பல துளிகளுள் ஒன்றை
தொட்டு மேல்நோக்கி பார்த்தானவன்
உதிரும் இலை ஒன்று அந்நொடியில்
அவ்வழி நடந்து சென்ற(அ)வனை அழைத்து
மனமுழுதையும் ஈர்க்குமென்று அறியாமல்...
- கிரிசேஷ் குமார்
மயங்கும் மனதுடன் தன்வியர்வையைச் சிந்த
மரக்கிளைகளை நனைக்கும் மழைத்துளிகள்
மெதுவாய் கீழ்நோக்கி படர்ந்து வந்து
முகத்தில் பட்ட பல துளிகளுள் ஒன்றை
தொட்டு மேல்நோக்கி பார்த்தானவன்
உதிரும் இலை ஒன்று அந்நொடியில்
அவ்வழி நடந்து சென்ற(அ)வனை அழைத்து
மனமுழுதையும் ஈர்க்குமென்று அறியாமல்...
- கிரிசேஷ் குமார்