என்றும் இல்லாமல் ஆவலுடன் விடிந்தது இந்த காலை பொழுது ஆனால் நான் எழுந்தேன் விடிந்து மூன்று மணி நேரம் கழித்து...ஆம் இன்று தான் நான் என் பல நாள் நட்பை காண பல நாட்கள் கழித்துச் சந்திக்க செல்லப் போகிறேன் . எழுந்தேன் முகத்தில் ஓர் புன்சிரிப்புடன் , என் சராசரி வேலைகளை முடித்துவிட்டேன் ஒரு இனம் தெரியாத ஆனந்தத்துடன் ...... ஏதோ ஒரு ஏக்கம் ....!பசியைக் கூட மறந்தேன் தட்டில் வைத்த மொறுகலான தோசையை பார்த்தும் கூட ! என்றும் போல் இன்று தோன்றவில்லை .... மகிழ்ச்சியான மனதுடன் வைத்த தோசையை பாட்டி திட்டிய பிறகு உண்டேன் ஏதோ என்னை புகழ்வதைப் போல் . இதற்கு மேல் முடியாது ... தண்ணீரைக் குடித்து இருந்த தோசையை உண்டு முடித்தேன் . கிளம்பினேன் களிப்புடன் . பேருந்து நிறுத்தத்திற்கு சென்றடைந்தேன் . சில மணித் துளிகளில் வந்தது என்னை அழைத்துச் செல்லும் வாகனம் . நான் சென்றடைந்தேன் என் கல்லூரிக்கு . அப்போது மனதில் ஒரு எண்ணம் அவர்கள் எப்படி இருப்பார்கள் , என்னை பார்த்து என்ன கூறுவார்கள் என்று ....நினைத்துக் கொண்டே இருந்தேன் அவர்கள் வந்தடைந்ததைக் கூட கவனிக்காமல் !!! நின்றது என் எண்ணம் அவர்களைக் கண்டவுடன் .பூரிப்புடன் வெட்கம் என் முகத்தைச் சூழ்ந்தது !!! இதனிடையில் சொல்ல மறந்தது என்னுடன் வந்த என் கல்லுரித் தோழியைப் பற்றி . வந்தனர் என் நண்பனும் , தோழியும் . கண்டேன் அதே சிரிப்பை அவர்கள் முகத்திலும் ... பார்த்தவுடன் ஓர் புகைப்படம் ... இன்றைய பழக்கமல்லவா அதனாலேயே எடுத்து முடித்தோம் . என் கல்லூரிக்குச் சென்று என் புது நட்புறவுகளை காண்பித்தேன் .சிறிய தேநீர் விருந்திற்குப் பிறகு கிளம்பினோம் அங்கிருந்து .சொல்ல மறந்து விட்டேன் அப்பொழுது எங்களுக்கு தெரியாது எங்கு செல்வதென்று ...( சிரிக்க வேண்டாம் யோசித்துவிட்டோம் சில நொடிகளில் ). ஒரு பேருந்தைப் பிடித்தோம் பின் அமர்ந்தோம் பின் இருக்கையில் . இலக்கில் இறங்கினோம் அனால் ஏதோ என்னை உறுத்தியது . என் தோழன் கூறினான் நாங்கள் பயணசீட்டையே எடுக்கவில்லை என்று !!! சிரித்துக்கொண்டு வருந்தினோம் அந்த பெண் நடத்துநற்காக ... அங்கிருந்த பேரங்காடிக்குள் புகுந்தோம் நினைத்தபடி . சுற்றிப் பார்த்தோம் என்ன செய்வதென்று தெரியாமல் .என் கல்லுரித் தோழி பசிக்கிறது என்றாள் . அருகில் இருந்த பணிக்குழை நிலையத்தில் நான்கு பனிக்குழயம் வாங்கினோம் . பின் சென்றோம் மேல் மாடிக்கு . பசி அனைத்துவிடுமா அந்த சிறு உணவு அதனால் சென்றோம் ஓர் நவீனசிற்றுந்திக்கு . என் தோழி எங்கள் வற்புறுத்தலால் வாங்கினாள் எங்கள் மதிய உணவை .மேற்கூரை இல்லாமல் இருந்த அந்த தென்றல் தொடும் இடத்தில் உணவை சாப்பிட்டு முடித்தோம் . மணி மதியம் இரண்டு . லேசாக ஆரம்பித்தது எங்கள் பள்ளி நினைவுகள் .... சென்றோம் அந்த மாய உலகிற்கு . இதனிடையில் மறந்து விட்டேன் என் கல்லூரித் தோழியை. .அவளிடம் மன்னிப்பு கேட்க மறந்துவிட்டான் . மணி நான்கானது அந்த மாய உலகம் எங்களை விட வில்லை . எங்களுக்கு தெரியும் அங்கிருந்த எல்லோரும் எங்களை நோக்கியது . எல்லாம் நாங்கள் செய்த கேலி கூத்தினாலேயே ! நாங்களும் சிரித்தோம் . பின் என் கல்லூரித் தோழியைப் பார்த்தேன் . ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தாள் . பாவம் அவளுக்கு ஒன்றும் தெரியாதே !! கிளம்பினோம் அங்கிருந்து . அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்றோம் . ஆம் எடுத்த புகைப்படங்கள் பல அதனால் கூறவில்லை . அங்கு சென்று சிறிது நேரம் களித்தோம் . பின்பு என் களிப்பு குறைவதை உணர்ந்தேன் அவர்களை பிரியும் நேரம் வந்தவுடன் . அங்கிருந்து கிளம்பினோம் எல்லோரும் தம்தம் உறைவிடத்திக்கு மனதில் ஒரு கவலையுடன் . அனால் எங்கள் உள்ளத்தில் இருந்தது ஒரு அருமையான நினைவு இன்றைய சந்திப்பைப் பற்றி . பிறகு எழுந்தது ஒரு எண்ணம் திரும்ப எப்போது சந்திப்போம் என்று ...!! "இது ஆனந்தமா ? இல்லை கவலையா?", என்று தெரியவில்லை ! இதுவும் ஒரு நாள் என் வாழ்வில் என்ற எண்ணத்துடன் நிதானமடைந்தேன் . இன்றைய நிகழ்வு பலநாள் இன்பத்தைத் தரும் என்ற நம்பிக்கை வந்தது .
-கிரிசேஷ் குமார்
✌✌
பதிலளிநீக்கு