வெள்ளி, 30 ஜூன், 2017

அந்த முகம்

தவறுணர்ந்தேன் நான் ஒரு நாள், 
தவித்தெழுந்தேன் திகைத்துநின்று -அன்று 
பெரும் தவம் செய்துள்ளேன் போலும், 
மறைந்த போன பிறவிகளனைத்தும், 
அந்த முழுமதி இத்தருணம் என்னுடன் இருக்க... 
நீண்ட பிரிவின் பின் பேசினேன் என்னுள்ளே, 
பிரிந்து திரிந்த ஆறுகள் சங்கமிக்கும் கடலிடையே 
அன்புடன் அவளுடன் - உற்சாகம் குறையாது 
செயல்பட்டேன் மனதில் அவள் முகத்தை பார்த்து. 
திரும்பியது அவள் பார்வை என்மேல், 
கதிரவனை பின்தொடரும் நிலவாக... 
என்னை அவளிடம் பகிர்ந்துகொள்ள, 
நின்றேன் கண் கசக்கி என்னை அறியாமல், 
கரம் கொடுத்து ஊக்கமூட்டியவள், 
வந்தால் அவள் என் கண்முன்னே, 
என்றும் கலையாத பகற்கனவாக !




                                                                                                                 - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 16 ஜூன், 2017

நான் காதல் கொண்ட மழைத்துளி !

சிடு சிடு மழையே நீ- உன்னைக்கண்டு 
மறந்தேன் இவ்வுலகை யோசிக்காமல், 
சட்டென்று என் மனதில் இருந்தும்.
உன்னைக் காணவே தவம்கிடந்தேன், 
ஏமாந்து போனேன் உன்னில் கண்ட ,
என் முகத்தைப் பார்த்த அந்நொடியிலே! 
வந்தாய் கடல் மெத்தையில், 
நான் தேடி அலைந்தும் கிடைக்காத, 
வெண்மேக முத்தாக என் கண்முன்னே. 
நீ செய்த மாயம் - மறைத்தது 
பல மென்னழகிய பெண்களை, 
எனது கண்முன்னே தெரிந்தாலும்... 
உன் அழகென்னை மயக்கியதைப் போல், 
வேறு எந்த மாதுவிடத்திலும்,
அவ்வளவு எளிதாக மயங்கிலேன் நான்! 
நீ வந்து விழுந்தாய் என் உச்சந்தலையில், 
நீந்தும் சிறு மீனாய் பாய்ந்தாய் என்னுள், 
அடிபட்ட மனம் கூட திகைத்து நின்றது! 
கவலை என்று பெயர் கொண்ட ஒன்று, 
சிதறியது நீ வந்த அந்த ஓர் கணத்தில், 
ஆசைப்பட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள, 
நனைத்துவிட்டாய் என்னை முழுமையாக !!!




                                                                                              - கிரிசேஷ்  குமார்  

திங்கள், 12 ஜூன், 2017

மயங்கும் கனவு

கனவில் கலையாத கலைமீன், 
கடற்காற்றில் மிதந்து வந்து ,
செங்கரு முகில்மேலே படர்ந்து, 
சில்லென வீசும் தென்றல் அது, 
தாரகை என நம்பவைத்தது என்னை, 
எந்தன் மனம் பறிபோனது உன்னிடம், 
கரைந்து செல்லும் கடல் உப்புகூட, 
கால் பதித்தது எனது மனதில், 
குழலோசை கேட்க ஆசைப்பட்டுக் கிரங்கி, 
கருங்குயிலின் இன்னிசையைக் கேட்டு, 
மெய்மறந்து இரசித்தேன் அவளை, 
நான் அன்று முதன்முதலாக....!



                                                                                                 - கிரிசேஷ் குமார்    

புதன், 7 ஜூன், 2017

வெண்ணிலவு

சிறகடித்து பறக்கும் ஆசைகள், 
வார்த்தைகள் பல பேசும் கண்கள், 
வாய் திறவா கேட்கும் எண்ணமது, 
மயங்கிக்கிடக்கும் மாலைப்பொழுதில், 
அன்று பார்த்தேன் அவள் முகத்தை, 
அந்த ஆற்று நீரில்தான் ஆசையுடன், 
வெண்முகம் மறைந்து விளையாட, 
கார்மேகம் அவளைப் பாதுகாத்து, 
நான் ஒருநாள் கொள்ளைப்போனேன், 
அவளுக்காக ...ஆம் அந்த நிலவுக்காக!!!



                                                                                             - கிரிசேஷ் குமார்  

சனி, 3 ஜூன், 2017

சிறு கருத்துகள்

கரையோரம் நீந்தும் மீன்கள் பல, 
துளியசைவு உணர்ந்ததும் இடம்மாறும். 
காற்றடித்து அசையும் மரங்கள் கூட, 
உதிர்க்கும் சில இலைகளை - ஆனால் 
அதிலிருக்கும் பறவைக்கூட்டினைக் கலைக்காமல்.
நம் மனதில் கவலைகள் பல சூழ்ந்தாலும், 
சிறு நுனிப்புன்னகையை நம்முகத்தில் மலரவைத்தால், 
அதைப்பார்த்து மறுமொழியும் அப்பச்சிளம் குழந்தை, 
கவலைகள் அவை இன்னதென அறியாமல். 
பாலாகவே சில தோன்றினாலும், 
சிறு பனைப் பட்டதும் கள்ளாகும். 
பகை மறந்து பழக முயன்றால், 
நம் மனதில் அக்கவலை மறந்து, 
பிறர் மனதில் நம்பிக்கை கூடும் நம்மீது!



                                                                                      - கிரிசேஷ் குமார்