ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அனந்த கண்ணீர்

கருமேகங்கள் கூடும் பொழுதில் - மண் 

மணமது உயிர்த்தெழும் வகையில் 

சிறு விதையொன்று தாகம் தணிக்க 

சிந்தும் கண்ணீரும் ஆனந்தம் தானே...!

கண் முன் தெரியாத ஒளி

நிழலெல்லாம்  நிஜமாய் தெரியுமாம் - உன்

பார்வை  அதனில் இருளுறைந்து நிற்குமாம்

காலம் கடக்கும் காத்திருப்பில் - நிழலது

நிஜத்தில் மறையுமாம் உன் பின்னே!


ஞாயிறு, 17 மே, 2020

நம்மக்கள்

காலத்திற்கு மாறா என்றிருந்த 
கனவுகள் எல்லாம் கண்முன்னே 
கரிசல்களாக மாறியதை காணகிடைக்க 
(துர்)பாக்கியம் செய்தேனோ முன்னொருநாள் 
பயணம் அதனில் துணைநின்று 
பண்பினை ஒழுகுவர் என்றிருக்க 
பணயம் வைத்தர் (நம்)பயணத்தை 
நம்பிக்கை என்ற வார்த்தைக்கு 
நிச்சயம் இல்லா இவ்வுலகில் 
பொருளறியாத (தன்)நலத்தால்  
நயம்பட நமது நிலையறிந்து 
நம்பிட செய்தர் நம்மக்களே...! 

நம்மக்கள் 



                                                    - கிரிசேஷ் குமார் 





செவ்வாய், 3 டிசம்பர், 2019

வியப்பு

கடத்தும் கார்முகிலில் கரையும் கதிரிளவன் 
மயங்கும் மனதுடன் தன்வியர்வையைச் சிந்த
மரக்கிளைகளை நனைக்கும் மழைத்துளிகள் 
மெதுவாய் கீழ்நோக்கி படர்ந்து வந்து
முகத்தில் பட்ட பல துளிகளுள் ஒன்றை 
தொட்டு மேல்நோக்கி  பார்த்தானவன் 
உதிரும் இலை ஒன்று அந்நொடியில்
அவ்வழி நடந்து சென்ற(அ)வனை அழைத்து 
மனமுழுதையும் ஈர்க்குமென்று அறியாமல்...

                                                                                     


                                                                              - கிரிசேஷ் குமார் 



சனி, 31 ஆகஸ்ட், 2019

ஒரு படி மேல்

ஒருமையில் இருந்தவன் நான் - என்னையும் 
உன்னை நோக்கி நகரச் செய்து 
நித்தம் நின் நிழலில் நான் வாழ நினைக்க 
தசையனைத்தும் உருகிட உன் பார்வையில் 
என் தவறுகள் பலவற்றை சரி செய்து நீ 
தவறாதவாறு நான் உன்னை பார்த்துக்கொள்ள 
ஏக்கம் அனைத்தையும் வடிந்த என் கண்ணீரில் 
துடைத்தெறிந்த உன் மடியில் நான் சாய 
எனை நானே எதிர்பார்க்காதவாறு மாற்றிய 
உன்னை நீ எதிர்பார்த்ததை விட 
நான் இன்று ஒரு படி மேல் சென்று 
முற்று பெறாத எனது ஒரே கவிதையாய் 
பார்க்கத் தொடங்கிவிட்டேன்...


புதன், 15 மே, 2019

காத்திருப்பு !

மனம் நிறைந்து மழையது பொழிய 
மதி மயங்கி மனமது உணர 
பார்வை சிதறாக கண்ணதனைக்காண 
பனைஓலையில் படர்த்துளியாய் நானும் 
நினைவலையில் நித்தம் நீந்தி 
நிகழ்வனைத்தும் நிஜமாய் எண்ணி 
வார்த்தைகளாய் வடிவம் பெற்று
வருகையை எண்ணி காத்திருந்தேன்...!




                                                           - கிரிசேஷ் குமார் 


திங்கள், 29 ஏப்ரல், 2019

தவிப்பு

யாரென்று தெரியாது யவரென்று புரியாது 
குழம்பித்தவிக்கும் மனமதன் வழியில் 
கெட்டவை நல்லதாகவும் அதே சமயம் 
நல்லவை கெட்டாதவவும் பார்த்திடும் இக்கண்கள் 
அதற்க்கு பார்வையிடும் அந்த உயிருக்கும் 
மனமொன்று இருப்பதனை மறந்துவிடுகின்றன 
இதையறிந்த தவிப்பில் கிடைக்கும் அம்மனமோ 
அனுபவிக்கும் இன்னல்கள் ஏரளமெனினும் 
இவற்றை மறைத்து சிரிக்கும் முகமானது 
மனதின் வழியை வெளிப்படுத்துவதில்லை!







                                                                                                     - கிரிசேஷ் குமார்