செவ்வாய், 28 மார்ச், 2017

எங்கள் உரிமை

நீர் சொட்டும் பணிப் பூக்கள் 
செம்மண்ணில் அதன் வாசம் நிறைய 
கரைபுரண்டு ஓடும் ஆற்றில் 
கண்ணீரைக் கரைக்கும் மீன்கள் 
உமிழ்நீர் வற்றிய பெண்களின் முகமுணர்ந்து 
வற்றாத வியர்வையில் நின்று 
கலைப்பற்று உழைக்கும் ஆண்களைக் கண்டு 
கவி புனைய நினைத்த என்னை 
கண்களில் நீர் நனைய வைத்தது 
வாடாது இம்மண்ணின் பசுமை 
நினைத்தபோதெல்லாம் வதைப்பதற்கு 
எம் மக்களின் உயர்வை முடக்குவதற்கு 
எங்கள் சோற்றில் அடித்தல்
பயந்து வீழ்வோம் என நினைத்தாயோ !!!



                                                             - கிரிசேஷ் குமார்      

புதன், 22 மார்ச், 2017

பகற்கனவு

ஒரு நாள் பகல் கனவு 
வேலை ஓயாத அந்த நாள் 
ஒவ்வொன்றாக செய்துகொண்டிருந்த நான் 
உமிழ்நீர் சுரக்க இயலா வறட்சி 
தாகத்தில் தவித்த உயிர் எனது 
திரிந்தேன் கால் வலிக்க எங்கும் 
கிடைக்கவில்லை தண்ணீர் மட்டும் 
மயங்கி விழச்சென்ற என் முகத்தில் 
ஓர் சொட்டுத் துளிநீர் விழுந்தது 
அன்னாந்து அந்த வானத்தை நான் நோக்க 
"மகனே! உன் தாக்கத்தைக் கண்டு 
என் கண்கள் கலங்கின !",
என்றது அந்த கார் மேகம் .
விழித்தெழுந்தேன் கனவிலிருந்து 
கண்ணீரைத் துடைத்தேன் 
நிற்காமல் பெய்யும் அம்மாழையைக்கண்டு ....!


                                                                        - கிரிசேஷ் குமார்   

செவ்வாய், 21 மார்ச், 2017

அவள் யார் ?

தினம் ஒரு விடியல் - வியந்து
உள்ளம் திகைத்திடும் நொடியில்
ஆச்சிரியத்திற்கு அளவில்லை - ஆனால்
அவள் அன்பின் முன்னாள் ஒன்றுமில்லை
கற்பனை உலகில் கண்டான் அவளை
தொலைந்தான் அவ்வுலகில் அவளைத் தேடி
அவள் முகம் படிந்த அவன் மனதில்
அவள் இருக்குமிடம் ஒளிரவில்லை
நம்பிக்கையோடு கழிந்த தினங்களெல்லாம்
நம்ப மறுத்தன அவன் அவளைக் கண்டதும்
சில்லரைபோல் சிரிக்கும் அவள் சிரிப்பின் பின்னல்
தன் சிரமத்தை மறந்து அலைந்த அவன்
கவலை இல்லாது தினம் சிரித்தான்
இவ்வுலகில் உள்ள வருத்தமெல்லாம்
கனவுலகில் உதிர்ந்தன உதிரிப்பூக்களாக
இவ்வாறு அவன் கனவில் உயிர் வாழ
உறுதுணையாக இருந்த அவள் ..... எவள்தானோ ?


                                                                                   - கிரிசேஷ் குமார்  


சனி, 18 மார்ச், 2017

தீராத ஏக்கம்

கண் திறந்து நான் பார்த்த உலகில் 
கண் கலங்கி நின்ற என் தாய் 
அவளுக்கு இருந்த ஆனந்தத்தில் 
செய்வதறியா திகைத்து முத்தமிட்டாள் 
முதல்முறை என் அழுகையால் 
தன்  கண்ணீரைத் துடைத்தாள் அவள் 
நான் வளர்ந்த பிறகும் கூட 
அவள் வலி தெரியவில்லை எனக்கு 
பார்த்துப் பார்த்து தாங்கினாள் என்னைக்  
காலமெல்லாம் நான் சுமக்க அவளை
முடியா இயலாமையில் வாடியதென் உள்ளம் 
என்னை விட்டுச் சென்றால் அவள் 
என் மனதில் அவளது ஞாபகத்தோடு !


                                                                    - கிரிசேஷ் குமார்

செவ்வாய், 14 மார்ச், 2017

கனவில் கண்ட சீதை

கதை அறியா முகங்கள் இருந்தும் 
பகல் கனவில் பளிச்சிடும் தேகம் 
புத்தக முகப்பாக இருந்திடும் ஆற்றல் உனது 
தத்துவத் துணுக்காக கற்கும் என் மூச்சு 
பிரம்மன் படைத்த ஒரே அழகென நீயும் 
வருகிறாய் என் கனவில் இதுநாள் வரையில் 
சிப்பியைத் தகர்த்து மின்னிடும் முத்தினைப்போல் 
உன்னைத் தேடிப்பிடித்தேன் வனவாசித்த இராமனாய் !!!



                                                                                                  - கிரிசேஷ் குமார் 

வெள்ளி, 10 மார்ச், 2017

என் பார்வையில் மதம்

பிறப்பு ... இவுலகில் வாழும் நாம் அனைவரும்
ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்தவர்கள்.
இங்கு 'நீ' , 'நான்' என்ற கேள்விகளுக்கோ அதனை 
சமாளிக்கும் விடையினிற்கோ இடமில்லை .
நான் பிறந்தேன் ஒரு தாய் வயிற்றில் அதேபோல்தான் 
நீயும் . இவ்வையத்தில் நீடிக்கும் நாம் ஒவொருவர்க்கும் 
பயம் , பக்தி தேவை , இதனை ஈடு கட்ட பிறந்ததையே 
மதங்கள் . இன்னாருக்கு இன்னின்ன மதம் என்று 
தேர்வு செய்வதற்கு நாம் யாருக்கும் உரிமையில்லை .
அவை நம் கடமையும் இல்லை . ஒருவன் ஓர் கல்லினை
அவனது தெய்வமாகவும் , வேந்தனாகவும் ஏன் அதை தன் 
தாய் தந்தையராகவும்  வைத்துப் போற்றும் 
உரிமையுள்ளது .அதுவே அவன் மனதை அமைதியாகும் .
அனால் நம் சமுதாயம் பெருகப் பெறுக நமது 
சிந்தனைகளும் கூடின . அப்போது ஆரம்பித்ததே 
இம்மதப்போர் . ஒருவனின் தோற்றமும் சுற்றமும் 
அவன் மதத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்தன .
தனித்து நின்று ஒருவனால் அவனுக்குப் பிடித்ததை 
ஏற்கஇயலவில்லை . "யார் இவர்கள் நமது உரிமையைப் 
பறிப்பதற்கு?", என்று அவன் அன்று சிந்தித்திருக்க வேண்டும் .
அனால் , நமக்கு தெரிந்து இம்மனிதனின் மனமோ தனித்து 
நிற்பதை விட்டு விட்டு கூட்டினை தேடும் பாங்குடையது .
அது அதன் பிழையன்று . இன்று , அதே சிந்தனைகள் 
பரிணாம வளர்ச்சிபெற்றப்பின் உலக தத்துவத்தை உணர்ந்தன .
மகிழ்ச்சியான விஷயம் என்று இதனை படிக்கும் ஒவொருவரும்
எண்ண வேண்டும் . அனால் அது என்னவென்று தெரியவில்லை
கசப்பூட்டும் உண்மைகள் காயங்களையும் சேர்த்து ஊட்டுகின்றன .
இந்த உண்மையை நம்மால் நம்ப இயலாதது நிதர்சனம் .
ஒவொருவர்க்கும் ஓர் கருத்து என்னும் அடிப்படையில் எனது
கருத்தானது சிறிது மாறுபடும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
நாம் பார்க்கும் அனைத்தும் விழிவழியே . ஆனால் , அவ்விழியே
மனதில் இருந்தால் .....??? "மனவிழி" ஆம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது 
மதப்பிரிவினைகள் அல்ல !!! மனிதப் பக்குவத்தில் அமைந்த பண்பாடு .
விழியை திறக்கும் சாவியாக மனதை பயன்படுத்தினால் 
ஒளிரும் இவ்வுலகம் துளிர்விட்டுத் தென்படும் என்பதே என்னுள் 
அமைந்த ஓசை . 


 இப்படிக்கு விழி மூடியே மனதை திறந்து தங்களிடம் அவற்றைக்
கூறிடும்   கிரிசேஷ் குமார்