புதன், 31 மே, 2017

இரு துருவம்

சில திங்களில் தோன்றிய எண்ணம், 
நல்லவன் ஒருவன் இருப்பானா? 
அவ்வாரே இருந்துவிட்டால் எப்படி இருப்பான்? 
நல்லது என்றால் என்ன ?
"பிறர்க்கு உதவியாக இருத்தல், 
ஆபத்தில் இறங்கி மீட்பது, 
உயிர் கொடுத்து காப்பது" 
இவ்வாறு செய்தலால் ஒருவன் நல்லவனா? 
பின் ஒருவன் தன் வாழ்க்கையை, 
தான் விரும்பும்படி அமைத்தால், 
அவனிடம் பிறர் எப்படி பழகவேண்டும், 
தான் அவர்களிடம் எவ்வாறு இருக்கவேண்டும் 
என்றெல்லாம் ஆசைப்பட்டால்... 
சுருக்கமாக... தன் எண்ணத்தை செயல்படுத்தினால்! 
இதில் யார் நல்லவன்? 
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், 
ஆனால் இச்சிந்தனை என் மனதில்
என் சமுதாயம் செய்த சதியாக இது  
உதித்தெழ காரணம் என்னவென்று புலப்படவில்லை!
நம்பிக்கை சிலர் மீது வரும்,
இங்கு பிரச்சனையே அங்கு தான்.
நான் யாரை எவ்வாறு எதைவைத்து நம்புவது?
இங்கு சில திசை தெரியாத நம்பிக்கைகளும் உள்ளன,
மனிதன் ஏன் நல்லது தீயது எனப் பிரித்தான்?
நம் வாழ்க்கையில் செய்யும் செயல்களில்,
நம் சுற்றத்திற்குப் பிடித்ததுதான் நல்லனவாக இருக்கவேண்டும்,
மற்றவை எல்லாம் அவர்கள் தீயன என்று பெயர் சூட்டுகிறார்கள். 



                                                                                                            - கிரிசேஷ் குமார்



வெள்ளி, 26 மே, 2017

எண்ணங்கள் பலவிதம்

கதைக்களம் தேடும் வழியில், 
சந்தித்தேன் ஓர் புதிய விடியல், 
சிலிர்க்கும் சிந்தனைகள் பல சேர்த்து, 
அன்பால் பிணைத்தது அவ்வோருயிர், 
சாதனைகள் பலவென்றாலும், 
வென்றிடுவது ஒரே வெற்றியை, 
வாழ்க்கை நமதென்பது உண்மை, 
நாம் வாழ்வது பிறர்க்காவது ஊக்கம், 
வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும், 
தோல்வியினை மறந்திடக் கூடா...!



                                                                                    - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 23 மே, 2017

ஆசை

ஆசை எல்லாம் அன்பு, 
நான் நீயாக நாம் யாராக?
என்றும் என் உலகில்  
நிறையும் பல கற்பனைகள்,   
படிந்தது என் கனவில், 
எறும்பின் பின் ஒழிந்த யானையாக,
நிறையாத ஆசைகள் பல, 
நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும்,  
உள்ளுணர்வுகள் சில என்னுள்,    
அனலை உறையவைத்து- அடை
மழை நீரை உருக்கச்செய்து, 
வெண்பனியிடம் மலரக் கூறி, 
கல்லை கடல் நீராக்கி,  
அதில் கால் நனைக்கும் நான், 
இன்பம் பெற விலை கேட்கிறேன், 
விலை உயிராக இருந்தாலும் கூட...!






                                                                                              - கிரிசேஷ் குமார்

புதன், 17 மே, 2017

நான் ஒளிந்துகொண்ட இடம்...

உயர்ந்து நிற்கும் மலையே உன்,   
கை இலைகளால் தட்டிக்கொடுக்கும், 
படர் மேகங்களை எளிதில், 
கவர்ந்திழுத்தாய் என் கண்களை,
பின் நின்றேன் நான் பார்வையைத் தொலைத்துவிட்டு ! 
எழில் நிறைந்த சோலைகளெல்லாம், 
அணிந்தது பசுமையை தன் ஆடைகளாக, 
சொட்டுச் சொட்டாக விழும் வானிலிருந்து, 
தரை பூசி மண் வாசம் வீசும் ! 
அவ்வழியில் செல்பவர்களுக்கு, 
மனம் மயங்க வைக்க, 
சற்றுமுன் மலர்ந்த பூக்களின் 
வாசம் கலந்து வீசும் தென்றலின், 
வண்ணம் தெரியாமல் இன்புற்றேன் நான் !
ஓவியமாய் தெரிந்த காட்சிகளில், 
நான் சென்று நின்றேன் சிறு துரும்பாக, 
அந்த அழகினிற்க்குள் ஒளிந்துகொள்ள !




                                                                                               - கிரிசேஷ் குமார்   

செவ்வாய், 9 மே, 2017

கண் பார்த்த கவிதை !

கதிர் வளர ஏங்கும் பொழுது, 
சில்லென சிலிர்க்கும் தண்ணீர், 
மலர்மொட்டு திறக்கும் தாமரை, 
துளிநீர் கூட கசியா இலைகள், 
பனித்துளிகளைத் தாங்கும் அவற்றில், 
கதிரவனுக்காக காத்திருந்து,  
விடிந்தவுடன் விரியும் இதழ்கள், 
குளமெங்கும் வெண்சிவப்பு, 
இத்தனை அழகிகளை தாங்கிக்கொண்டு, 
தடுமாறாது நிற்கும் வேர்கள் நிமிர்ந்து, 
இவை அனைத்தையும் கண்ட, 
என் கண்கள் இமைத்தது குளிர்ந்து, 
கனவில் கூட மறவாது வந்திடும், 
காட்சி அமைப்பானது அந்த காலைப்பொழுது!




                                                                                                          - கிரிசேஷ் குமார்   

சனி, 6 மே, 2017

தூயன்பு

இயற்கையின் விளையாட்டின் ஒரு பகுதி,
நீ உனக்காக யாரும் இல்லை என நினைக்கும்போது,
நிழல் போல் வந்து செல்லும் கனவாக,
உன் சுற்றத்தின் அன்பு உனக்காக...
திசை மாறாது உன் திறமையை, 
நேர் திசைந்திடுவாள் உன் தங்கை, 
தடையற்று தயங்காமல் நீயும், 
தன்னம்பிக்கையோடு துணிந்து செல்ல, 
தாயன்பு காட்டும் அந்த நெஞ்சம், 
உன் தோழியாகவும் இருக்கலாம் -அற்று 
உன் தோள் பகிரும் துணையாகவும் இருக்கலாம். 
யவராக இருப்பினும் உன் வெற்றிக்காக, 
தாம் ஆனந்தப்படுவர் தத்தம் நிலை பாராமல், 
இவ்வாறு உனக்காக ...உனக்காக...
என்றிருக்கும் இவர்களை தூய அன்போடு, 
அணைத்துக்கொள் உன் மனதின் உயிராக !



                                                                                       - கிரிசேஷ் குமார்   

செவ்வாய், 2 மே, 2017

சிறு சிந்தனை

மலர் மொட்டும் அணைத்துக்கொள்ளும், 
படர் பனியும் பட்டுத் திரிந்தால். 
சிலை உனையும் பார்த்து ரசிக்கும், 
உன் அகம் மலர நீ நடந்தால். 
நாம் ராசிகளாய் பார்க்கும் பன்னிரண்டும், 
பகை மறந்து பாசம் காட்டும். 
கண்முன் உள்ளோரை மகிழவைத்தால், 
கடன் பெற்றாவது உதவுவர் உனக்கு. 
காற்றடிக்கும் இயற்கையை அறிந்தால், 
கண்ணீரே கரைந்து போகும். 
ஒரு வழி இடைப்பட்டாலும், 
மறு வழியில் வாழ்க்கை மாறிவிடும் !


                 
                                                                                                   - கிரிசேஷ் குமார்