புதன், 31 மே, 2017

இரு துருவம்

சில திங்களில் தோன்றிய எண்ணம், 
நல்லவன் ஒருவன் இருப்பானா? 
அவ்வாரே இருந்துவிட்டால் எப்படி இருப்பான்? 
நல்லது என்றால் என்ன ?
"பிறர்க்கு உதவியாக இருத்தல், 
ஆபத்தில் இறங்கி மீட்பது, 
உயிர் கொடுத்து காப்பது" 
இவ்வாறு செய்தலால் ஒருவன் நல்லவனா? 
பின் ஒருவன் தன் வாழ்க்கையை, 
தான் விரும்பும்படி அமைத்தால், 
அவனிடம் பிறர் எப்படி பழகவேண்டும், 
தான் அவர்களிடம் எவ்வாறு இருக்கவேண்டும் 
என்றெல்லாம் ஆசைப்பட்டால்... 
சுருக்கமாக... தன் எண்ணத்தை செயல்படுத்தினால்! 
இதில் யார் நல்லவன்? 
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், 
ஆனால் இச்சிந்தனை என் மனதில்
என் சமுதாயம் செய்த சதியாக இது  
உதித்தெழ காரணம் என்னவென்று புலப்படவில்லை!
நம்பிக்கை சிலர் மீது வரும்,
இங்கு பிரச்சனையே அங்கு தான்.
நான் யாரை எவ்வாறு எதைவைத்து நம்புவது?
இங்கு சில திசை தெரியாத நம்பிக்கைகளும் உள்ளன,
மனிதன் ஏன் நல்லது தீயது எனப் பிரித்தான்?
நம் வாழ்க்கையில் செய்யும் செயல்களில்,
நம் சுற்றத்திற்குப் பிடித்ததுதான் நல்லனவாக இருக்கவேண்டும்,
மற்றவை எல்லாம் அவர்கள் தீயன என்று பெயர் சூட்டுகிறார்கள். 



                                                                                                            - கிரிசேஷ் குமார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக