கனவென்ற ஒன்றில் நான் வாழ்ந்து வந்தேன்,
வருவதும் போவதும் யாதென்று அறியாமல்.
கசப்பான ஒரு வாழ்வினை வேறு வழியின்றி நான்,
ஏற்று நடந்தது கூட தெரியாமல்...
எண்ணமெல்லாம் கலங்கி நிற்கும்,
சிறு குட்டையாக தோன்றியது நான் பார்க்கும்போது!
பெருகிக்கிடக்கும் ஆனந்தமும் தொலைவினில் கண்டேன்,
சின்ன சின்ன பிரச்சனைகளும் பெருகி வரப்பார்த்தேன்.
சிறு துரும்பிலும் தனிமையை உணர்ந்தேன்,
சிதறிப்போன வாழ்க்கை என்று நினைத்த அதனை,
நான் கண் விழித்துப் பார்க்குமாறு,
பக்குவமாக பேசிப் பேசி - பிரிவினைகளை
புரியவைத்து பாசமாக பழக வைத்து
பல சுவைகளை அறிய வைத்தனர் புரியவைத்தனர்,
நானாக எனக்குள்ளே யோசித்துப் பார்க்க...
நாடா ஒன்று தேடா கிடைக்காது.
நடந்து செல்லும் வழியில் கூட,
அமைதி தரும் சில தருணங்கள் தமக்கிடையே மொழிந்துகொண்டது!
அதனை பார்த்தபோது நான் கேட்டேன் எனக்குள்ளே,
"நான் ஏன் எதிர்பார்க்கிறேன் ?",என்பதற்கு
விடை தெரியாவிடினும் தவறில்லை!
திரும்பிப்பார்க்க கூடாதென்று முடிவெடுத்தேன்.
கண் முன் தெரியும் ஒவ்வொரு நிகழ்விலும்,
நிழல் அகற்றி பார்க்க முயன்றேன்.
கனவென்பது கடந்து போனது.
வாழ்வென்பது புரிய தொடங்கியது.
"நான் யார் என்று நான் அறிந்தால் போதும்."
ஆம், விடையும் கிடைத்தது விடிவதற்குள்!
தொலைந்து சென்ற ஆனந்தங்கள் கூடிவர உணர்ந்தேன்.
பெருகிநின்ற பிரச்னைகளெல்லாம் பிரிந்து
செல்வதை கண் முன்னே பார்த்தேன்.
கலங்கி நின்ற கண்களைத் துடைத்தபின்பு,
பார்த்தேன் மரையிதழ் படிந்த குளத்தை!
தெரியாத கவலையில்லை மறக்கமுயன்றேன்,
புரியாத வாழ்க்கைத்தன்னை அறிய முனைந்தேன் !
- கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக