செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

என் கல்லூரி பல கோணம்

பாதைகளெல்லாம் பரவி திரிந்து 
எனக்குக் கிடைத்த முதல் நட்பாய் 
நிட்கின்ற பசும் மரங்களும் ,
அவற்றில் திசை காட்டும் இலைகளும் , 
நான் சுகந்திரமாய் அமர்ந்து  
எம் தோழர்களுடன் பழக வைத்த 
மஞ்சள் நிற அண்ணனும் ,
பச்சை நிற அக்காவும் 
புது ஓசையைக் கொய்தனர் .

தினந்தோறும் நுழைவில் பார்ப்பது  
எங்கள் அண்ணா சிலையின் முகத்தைத் தான் முதலில்.... 
அவருடன் உரையாடும் மலர்கள் ,
மலர முனையும் சிறு மொட்டுக்கள் 
திரியும் எங்கள் கண்கள் 
இவை அனைத்தையும் நோக்கி 
ஒரு சிற்றின்பத்தைத் தேடி.

மனமார கண்டு கழிக்க ,
செக்கச் சிவந்த கட்டிடம் ...
நம்பிக்கை தரும் ஒன்று,
படிக்கத் தூண்டும் பல்கலைக்கழகம் !
இங்கு தெரிந்த இடங்கள் சில என்றாலும் 
தெரிந்துகொள்ள பட்பல உள்ளன.
என் சகாக்கள் பலருக்கு 
கிடைக்காத புது உலகம் இது !


எத்திசையில் சுற்றிப் பார்த்தாலும் ,
நடக்க நடக்கச் செல்லும் சாலை ,
சிறிதும் சலிப்பூட்டாமல் - நாங்களும்  
செல்வோம் பெரும் திகைப்புடன்.
துளி நேரத்தையும் மதியில் புகட்டும் 
சுற்றிச் சுழலும் மணிக்கூண்டு !
அது ஓயாமல் ஓடும் அழகைக் கண்டு ,
மலைத்தோம் நாங்கள் அங்குநின்று !

என் வாழ்வில் ஒரு சகாப்தமாகவே 

அமைந்தத்து இச்சிறு பயணம் ,
இதுவரைக் காணாத ஒரு சூழல் ,
திரும்பிய திசையெங்கும் இலைதழைகள், 
அவற்றில் மலரும் பூக்களைப் பார்த்து 

மலர்ந்துள்ளன என் இதழ்கள் பெரும்பாலும் 
நான் தனிமையில் இருந்தபோதேல்லாம் 
புத்துயிர் புகட்டின எனக்கு இவையனைத்தும் !



கர்வம் கொள்கிறேன் ....!
இது தான் என் கல்லூரி என்று எல்லோரிடத்தும் 
பெருமையுடன் கூற...!
ஆனந்தம் அடைகிறேன் நான் ,
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 
என் காலை இம்மண்ணில் பதிக்க ,
ஏக்கமுடன்  துடிக்கிறேன் ,
இதுவும் என் கல்லூரியின் ஒரு கோணம் !!!


                                                                                          - கிரிசேஷ் குமார்  

சனி, 25 பிப்ரவரி, 2017

தூக்கம்

தூக்கம் ....... நல்ல தூக்கம் 
என்னை நான் மறந்து செல்ல ,
உன்னை என் மனதில் நினைத்துக்கொள்ள ...
கனவில் பேசும் உரைகளெல்லாம் ,
காவியமாய் படைப்பேன் நான் - உனக்காக 
நின் தூக்கம் விரும்பா உள்ளம் எனது ,
நித்தம் நினைக்கும் கனவில் - உன்னை 
நிம்மதியாக தூங்குவேன் தினமும்
உன்னுடன் இருந்த நினைவுகளை கண்டு ,
சிரித்துளேன் அவ்வப்போது  - நாம் 
செய்த குறும்புகளை உயிருடன் கண்டு ,
கண்ணீர்துளிகள் கூட முத்தானது என் கனவில் ,
கவலைகளை மறக்க பார்ப்பேன் உன் முகத்தை 
நன்கு தூங்குவேன் உன் நினைவோடு நான் !




                                                                             - கிரிசேஷ் குமார்   
 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

குப்பை

பார்க்கும் இடமெல்லாம் பரவிக்கிடக்கும் 
காற்றடித்தால் பறந்து செல்லும் 
நம் கையில் உள்ளவரை உயிரிருக்கும் 
கை விரித்தவுடன் மடிந்துபோகும் 
கலவையை சேரும் கூட்டம் 
கரையெங்கும் கண்ணில் பட்டும் 
அகற்றுவதற்குக் கூட ஆளில்லாது 
குளம் குளமாய் தேங்கிக்கிடப்பது குப்பையா ?
இல்லை , இவற்றை கண்டும் காணாமல் 
இருக்கும் ம(மா)னம் உள்ள நாம் குப்பையா ?
இவற்றில் குப்பை எது ...........? 




                                                                             - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உயிர் பெற்ற வார்த்தைகள்

மதி மயக்கும் நீ ,
மதிக்கிறேன் உன் முழுமனதை ...
என்னைத் தேடி வந்தாய் நீ ,
என்னுடன் இன்பமாய் சேர்ந்திடவே ...
மயங்கவைக்கும் மணி உதட்டால்
மன்னிப்பாயா நான் செய்த தவறுகளை ...
உன் தாமரைக் கரத்தை என்னிடம் கொடு
தனித் தன்னம்பிக்க்கையோடு உயர்ந்திடுவேன்
எத்தனை உயரம் இருந்தாலும்
உன்னை மனதில்வைத்து ... சிறகடித்து ...
இத்தனை நாட்கள் இருந்த கவலைகள் எல்லாம்
இறந்துபோகும் உன் பார்வையைப் பார்த்து ,
என்னை அனைக்க நீ வேண்டும் எனக்கு ,
உன்னை உயர்த்த நான் உள்ளேன் உனக்கு .
மழைத்துளியைத் தாங்கும் பசும்புல்லைப்போல்
என் மனம் தாங்கும் உன்னை
என் வாழ்நாள் முடியும் வரை ..!!!



                                                                     - கிரிசேஷ் குமார்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

புரியாத பாடம்

கல்வி கற்றுகொடுக்காதப் பாடத்தை 
காலம் புகட்டும் எங்கும் எப்பொழுதும் 
தயங்காது ஏற்கும் பக்குவமும் 
தங்குதடையின்றி கொடுக்கும் உள்ளமும் 
நாம் வளர்த்துக் கொண்டால் 
வாழலாம் வாழ்க்கையை 
நாம் விரும்பும் படி 
ஒரு இடத்தில் சலைத்தாலும் 
சரித்திரத்தில் இடம் பெறுவது கடினமாகும் 
முயற்சி செய்து நூறு இடத்தில் தோற்றாலும் 
பலம் கிடைக்கும் அவ்வனைத்திற்கும் கண்டிப்பாக 
ஆகையால் காலம் நமக்குத் புகட்டும் பாடம் 
" வாழ்க்கை ".....!




                                                                  - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மாங்கன்று !

கூழாங்கற்கள் நிறைத்த 
ஆற்றங்கரையில் ஆறடி 
வளர்ந்து நிட்கும் மேலோங்கி 
இலைதழைகளை செழிக்கச்செய்து 
நான் சென்று அங்கமர்ந்து 
ஆற்றின் அழகை ரசிக்கும் போது 
பரவி நிழல் கொடுக்கும் 
எனது தமயனாக தோள்கொடுக்கும் 
நான் வைத்த மாங்கன்றுடன் 
தனித்து நிட்கும் என் பாசம் 


                                                          - கிரிசேஷ் குமார்  

புதன், 8 பிப்ரவரி, 2017

கனி

மாங்கனியே உன்னைப் பார்த்தேன்
சிறிதும் தயங்காமல் - முகர்ந்தேன்
உன் சுவாசத்தை அந்நொடியில் இருந்து
ஆசைப்பட்டேன் பழ ரசத்தைக் கண்டு
விடமாக இருந்தாலும் விடமாட்டேன்
மென்மையான என் மனம் 
அதில் உள்ள வெற்றிடம் - உன்னால் 
நிரம்பி ததும்ப பரவியது 
என் உயிர் முழுதும் உன் மூச்சுக்காற்று !!! 



                                                      - கிரிசேஷ் குமார்    

திங்கள், 6 பிப்ரவரி, 2017

பட்டுப்பூச்சி

ஒரு சின்னப் பட்டுப்பூச்சி 
சிறகடித்தது என்னைப் பார்த்து 
இரு நீல வண்ணங்கள் 
மயில் மதியில் திரண்ட 
பச்சைக் கலந்த நீளம் ஒன்று 
கார்வண்ணன் போன்றிருக்கும் 
கருநீல வண்ணம் ஒன்று 
ஈர்த்தது என் கவனத்தை அது 
அங்கும் இங்கும் என்னைச் சுற்றி 
உன் முகத்தை பார்த்ததுப் போல் 
மயங்கினேன் நான்.. நின் எண்ணத்தில் 
அதை தெரியாதப் பட்டுப்பூச்சி 
நடனமாடியது ..அதனை கவனிக்காத 
என் முன்னாள் மெய்மறந்து ...
இவ்வாறு உன்னிணைப்பில் திரியும் 
என்னைப் பார்த்து சிறிதாவது 
சிரித்துச்செல் அப்பட்டுப்பூச்சியைப்போல் !




                                                               - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

உயிரில்லா உயிர்

என் தலையணைக்குத் தெரியும் 
நான் யார் என்று 
பலருக்குத் தெரியாத நான் 
பலநாள் பழகி இருந்தாலும் 
பகலிரவில் என்னை அணைத்திடும் 
அதற்கு மட்டுமே தெரியும் 
கண்ணீர் வடிந்த என் முகத்தைக் கண்டு 
எதற்காக நானே சிரித்தேன் என்று
அம்மழையையும் சேகரித்து 
என்னையும் அரவணைத்தது அன்போடு 
நான் எவ்வாறு கோபித்தாலும் 
என்னை அமைதிபடுத்திய அது 
பல நண்பர்களில் குறிப்பிட்டு எடுக்கும் 
சிறந்த நட்பில் ஒன்றாக திகழும்
உயிருள்ள பொருளாக தெரிகிறாய் !


                                                            - கிரிசேஷ்  குமார்     

புதன், 1 பிப்ரவரி, 2017

ஒற்றுமை

கலைந்து செல்லும் கண்ணீர் கூட 
கடல் நீராய் மாற வாய்ப்புண்டு...
உப்பில் பிறந்த இவ்விரண்டும் 
தப்பாமல் ஒன்றுவது தனித்துவமே 
காற்றில் அகலும் மேகமெல்லாம் 
கருமுகில் என்று எண்ணலாமோ...
சலனங்கள் நம்மிடையே தோன்றினாலும்  
செங்குருது ஒன்று தான் நமக்கு !

                                                                 - கிரிசேஷ் குமார்