தூக்கம் ....... நல்ல தூக்கம்
என்னை நான் மறந்து செல்ல ,
உன்னை என் மனதில் நினைத்துக்கொள்ள ...
கனவில் பேசும் உரைகளெல்லாம் ,
காவியமாய் படைப்பேன் நான் - உனக்காக
நின் தூக்கம் விரும்பா உள்ளம் எனது ,
நித்தம் நினைக்கும் கனவில் - உன்னை
நிம்மதியாக தூங்குவேன் தினமும்
உன்னுடன் இருந்த நினைவுகளை கண்டு ,
சிரித்துளேன் அவ்வப்போது - நாம்
செய்த குறும்புகளை உயிருடன் கண்டு ,
கண்ணீர்துளிகள் கூட முத்தானது என் கனவில் ,
கவலைகளை மறக்க பார்ப்பேன் உன் முகத்தை
நன்கு தூங்குவேன் உன் நினைவோடு நான் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக