செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

என் கல்லூரி பல கோணம்

பாதைகளெல்லாம் பரவி திரிந்து 
எனக்குக் கிடைத்த முதல் நட்பாய் 
நிட்கின்ற பசும் மரங்களும் ,
அவற்றில் திசை காட்டும் இலைகளும் , 
நான் சுகந்திரமாய் அமர்ந்து  
எம் தோழர்களுடன் பழக வைத்த 
மஞ்சள் நிற அண்ணனும் ,
பச்சை நிற அக்காவும் 
புது ஓசையைக் கொய்தனர் .

தினந்தோறும் நுழைவில் பார்ப்பது  
எங்கள் அண்ணா சிலையின் முகத்தைத் தான் முதலில்.... 
அவருடன் உரையாடும் மலர்கள் ,
மலர முனையும் சிறு மொட்டுக்கள் 
திரியும் எங்கள் கண்கள் 
இவை அனைத்தையும் நோக்கி 
ஒரு சிற்றின்பத்தைத் தேடி.

மனமார கண்டு கழிக்க ,
செக்கச் சிவந்த கட்டிடம் ...
நம்பிக்கை தரும் ஒன்று,
படிக்கத் தூண்டும் பல்கலைக்கழகம் !
இங்கு தெரிந்த இடங்கள் சில என்றாலும் 
தெரிந்துகொள்ள பட்பல உள்ளன.
என் சகாக்கள் பலருக்கு 
கிடைக்காத புது உலகம் இது !


எத்திசையில் சுற்றிப் பார்த்தாலும் ,
நடக்க நடக்கச் செல்லும் சாலை ,
சிறிதும் சலிப்பூட்டாமல் - நாங்களும்  
செல்வோம் பெரும் திகைப்புடன்.
துளி நேரத்தையும் மதியில் புகட்டும் 
சுற்றிச் சுழலும் மணிக்கூண்டு !
அது ஓயாமல் ஓடும் அழகைக் கண்டு ,
மலைத்தோம் நாங்கள் அங்குநின்று !

என் வாழ்வில் ஒரு சகாப்தமாகவே 

அமைந்தத்து இச்சிறு பயணம் ,
இதுவரைக் காணாத ஒரு சூழல் ,
திரும்பிய திசையெங்கும் இலைதழைகள், 
அவற்றில் மலரும் பூக்களைப் பார்த்து 

மலர்ந்துள்ளன என் இதழ்கள் பெரும்பாலும் 
நான் தனிமையில் இருந்தபோதேல்லாம் 
புத்துயிர் புகட்டின எனக்கு இவையனைத்தும் !



கர்வம் கொள்கிறேன் ....!
இது தான் என் கல்லூரி என்று எல்லோரிடத்தும் 
பெருமையுடன் கூற...!
ஆனந்தம் அடைகிறேன் நான் ,
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 
என் காலை இம்மண்ணில் பதிக்க ,
ஏக்கமுடன்  துடிக்கிறேன் ,
இதுவும் என் கல்லூரியின் ஒரு கோணம் !!!


                                                                                          - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக