வெள்ளி, 28 ஏப்ரல், 2017

முதல் எண்ணம்

இறைவன் ஒன்றை நினைத்தான், 
நம்மை இங்கு படைத்தான், 
அவன் தரித்த நெறி வழியில், 
நாம் பறிப்போம் மலர்களெல்லாம், 
அவன் அமைத்த பாதை ஒன்று, 
சிலர் திகைக்கிறோம் வீதியில் நின்று, 
கதை வகுத்த அவன் கரங்கள், 
முடிவென்பதை எழுத மறுத்தன... 
இயற்கை விடுமா அவனை மட்டும், 
மாற்றி ... எழுதியது அம்முற்றுப் புள்ளியை. 
இத்தகைய கடவுளால் கூட, 
மாற்ற முடியாத இவ்விதியை, 
மாற்ற முயல்வோம் நான் நம் கதையில்!



                                                                                     -கிரிசேஷ் குமார்    

திங்கள், 24 ஏப்ரல், 2017

முகம் தெரியாத எண்ணம்

அந்த சூரியனும் கதிர்மூடி மறைய, 
மதி உதிக்கும் மாலைப் பொழுதில், 
வாய் மூடி பேசும் வார்த்தைகள், 
மெய் உணர்ந்து கேட்கும் செவியும் -செல்லும் 
திசை அறியாது செல்லும் மனம் எனது, 
கடல் அலையாய் பாயும் எண்ணங்கள், 
திகைத்து நின்றேன் நான் அந்நிலஒளியில், 
நொடிகளைக் கடந்தேன் பல யூகங்களைப்போல, 
ஏன் இந்த வலி என்று தெரியாமல் நான்... 
கவலை ஏன் என பிறர் கேட்டும் கூறாது, 
அகம் மலரா என் முகத்தில் சிரிப்பைக் காட்டினேன்!


                                                                                                 - கிரிசேஷ் குமார்

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

உணர்வு

இரு முகங்களும் நேருக்கு நேர் இருந்தன,
நான் திகைத்துப் பார்த்தேன் அவளை, 
தெரிந்தது எனது புன்னகை அவள் கண்களில்! 
மலர் வாய் திறந்து அவள் பேசவில்லை, 
ஆனாலும் உணர்ந்தேன் அவள் பார்வையில். 
பலர் கூறும் மனக்கோட்டையை நான் அறியிலேன், 
இருந்தாலும்...........
நான் என் இதயத்தில் வைத்துள்ளேன் அவளை, 
அவள் மனதில் நான் இருந்தபடியே!
இப்படி இருக்க நான் நினைப்பதை 
கண்டுபிடிக்க அவளுக்கு வருடங்கள் பல ஆகுமோ ?


                                                                                     - கிரிசேஷ் குமார்     

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மனம்

மனமில்லா பேசிய வார்த்தைகள்,
புண்பட்ட நெஞ்சம் எனது!
தீர்வில்லா பிரச்சனைகள் இல்லை, 
ஆனாலும் உண்டு அவை.
தேடத்தெரியாமல் தவிக்கும் மாந்தர்கள் மத்தியில், 
கசப்பூட்டும் உண்மைகள் பல, 
காகிதக் கண்ணீர் வடிக்கும்!
கண் முன் தெரிந்தாலும், 
கள்வராய் சென்றவரெல்லாம், 
என்னிடம் பேச நான் முன்மொழிவேனோ?
ஒற்றுமை என்பதையே தெரியாத மந்தையில், 
நான் பேசாது என் வார்த்தைகள் ஒலித்திடுமோ...?


                                                                                            - கிரிசேஷ் குமார்  

திங்கள், 17 ஏப்ரல், 2017

ஓர் மரம்

தெரு ஓரமாய் நின்றிருந்த ஓர் மரம், 
பார்த்தும் பாராதிருக்கும் மக்கள் மத்தியில். 
தனிமையில் இனிமைகாணும் அதைப்பார்த்து, 
அன்புடன் சிரித்தன அழகுப் பூக்கள். 
வியந்தது என் பார்வை அதனை நோக்கி விரைந்து ,
ஆதரவற்ற பலரின் அடைக்கலமாய் தெரிந்தது.
சரசரவென அடிக்கும் காற்றும் கூட ,
உயிர் பெற்றது அதன்மேல் பட்டவுடன். 
புத்துயிருடன் வீசியது குளிர்ந்த தென்றலாக, 
வியப்புடன் நின்ற எந்தன் முகத்தில்.
நிலை புரியாத ஆனந்தம் எனக்கு !
"உனக்காக நான் இதைக்கூட செயலற்றேனா ?",
என்றது அதன் பசுமையான வார்த்தைகள், 
பலன் ஏதும் எதிர்பாராமல் !
உணர்ந்தேன் அவ்வனைத்தினையும், 
என் இயற்கைத்தாயின் பாசமாக !



                                                                      - கிரிசேஷ் குமார்     

புதன், 12 ஏப்ரல், 2017

ஊக்கம்

பேனா முனையை நீட்டிய கையுடன்,
கண் கலங்கி அலைந்த மனம் எனது.
கவிழ்ந்து விழும் கப்பலில் கூட,
கரை சேரும் வழி ஒன்று உண்டு.
என் எண்ணத்தை ஈர்த்த அந்த வார்த்தை,
எழுத வைத்தது எந்தன் கதையாய்...
சில்லுச்சில்லாய் உடைந்த என் மனதை,
சீரமைத்தது தோழி அவள் எண்ணம் .
"உன்னால் முடியும் ...!
கண்ணாடியாய் உடைந்தால் என்ன ?
ஒற்றைப் பார்வையை பெருக்க ,
உன்னால் முடியும் ! ", என்று 
கூறியது அவள் குரல் அன்று .
அதுவே என்னை எழுதவைத்தது இன்று ,
வாழ்க்கை என்பது இன்னதெனவென்று !



                                                                                     - கிரிசேஷ் குமார்



ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பெண்மை


எனக்காக எதையும் இழக்கும் தாய் ,
என் சோகத்தை சுகமாக்கும் தங்கை ,
எனக்காகவே என்றும் வாழும் மனைவி ,
இவ்வாறு எனக்காக என்று
இருக்கும் என்னையும்
அவர்களுக்காக கண்கலங்க வைத்த இவர்கள் ,
இவர்கள் இல்லாது நான் இல்லை என்று உணரவைத்த ,
பெண்கள் மென்பெண்கள் ....!


                                                                                               - கிரிசேஷ் குமார் 

சனி, 8 ஏப்ரல், 2017

முகத்திரை

அகம் மலரா முகம் மலர்ந்து 
சிரித்துப் பேசும் வார்த்தைகளெல்லாம் 
கடற்கரையில் எழுதும் கல்வெட்டுக்களே !
குற்றம் கூறித் திட்டுவதைவிட 
பொய்யாக காட்டும் அன்பும் கூட 
நஞ்சாய் பாயும் உண்மையின் உயிரில் !
புறம் பேசி ஏமாற்றுவதை விட 
முகம் பார்த்து அகம் பேசலாம் ...
தப்புணர்ந்தால் திருத்துவதை விட்டுவிட்டு 
முகத்திரையோடு புறஞ்சாடல் உயர்வாகுமோ ? 


                                                                                                 - கிரிசேஷ் குமார்   

வியாழன், 6 ஏப்ரல், 2017

இமையின் இமை

என் கண்ணுள்ளே நிற்கும் அன்பே
உன்னைப்பார்த்து நான் என் மனதில் 
இமை மூடி உன்னை நினைத்தேன்
இமை பொழுதில் வந்தாய் நீயே
கண் இமைத்துப் பார்த்த உன் பார்வையில் 
கண் இமைக்காமல் விழுந்தவன் நானே  
என் இமையில் நிற்கும் இமையே  
இமையோடு அணைத்துக்கொண்டேன்  
உன்னைக் காண கனவு கண்டேன் !


                                                                                                      - கிரிசேஷ் குமார்  

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

இளங்காலை நேரத்தில்

மறை பாதம் தரையில் படாது 
காற்றில் மிதக்கும் கார்மேகம் போலும் 
காணாது கண்டேன் அந்த வண்ணப்பூச்சியை 
வானிலை மாறிய சாரல் ஓரத்தில் 
குயில் கூவும் கதிரவன் வருகையில் 
அன்ன நடையில் அவள் வந்தால் 
என் முன் சிறகடித்துப் பறப்பதுபோல் 
அழகிய சிலை ஒன்றை கண்டது போல் 
என் மனம் அப்பிரம்மனை போற்றக் 
கண்ணடித்து அவளை நோக்கி !


                                                             - கிரிசேஷ் குமார்