தெரு ஓரமாய் நின்றிருந்த ஓர் மரம்,
பார்த்தும் பாராதிருக்கும் மக்கள் மத்தியில்.
தனிமையில் இனிமைகாணும் அதைப்பார்த்து,
அன்புடன் சிரித்தன அழகுப் பூக்கள்.
வியந்தது என் பார்வை அதனை நோக்கி விரைந்து ,
ஆதரவற்ற பலரின் அடைக்கலமாய் தெரிந்தது.
சரசரவென அடிக்கும் காற்றும் கூட ,
உயிர் பெற்றது அதன்மேல் பட்டவுடன்.
புத்துயிருடன் வீசியது குளிர்ந்த தென்றலாக,
வியப்புடன் நின்ற எந்தன் முகத்தில்.
நிலை புரியாத ஆனந்தம் எனக்கு !
"உனக்காக நான் இதைக்கூட செயலற்றேனா ?",
என்றது அதன் பசுமையான வார்த்தைகள்,
பலன் ஏதும் எதிர்பாராமல் !
உணர்ந்தேன் அவ்வனைத்தினையும்,
என் இயற்கைத்தாயின் பாசமாக !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக