நினைத்ததெல்லாம் நினைவாகுமா ?
நினைவுகளெல்லாம் நிஜமாகுமோ ?
இதனின் ஒரு எடுத்துக்காட்டாக என்
கல்லூரியின் கனவை பிறர் கூற நான்
என் செவியை இனிக்க விரும்பினேன்.
ஒரு நாள் இட்லி மாவு வாங்கி வர சென்றேன் ஒரு கடைக்கு.
இரு ஒரு கிலோவுக்கு மாவு மடிக்க சொன்னேன்.
அவர் ஏதோ என்னிடம் பல நாட்கள் பழகியது போல்
" என்னடா ஒரு திணிசாக கேட்கிற ?
நீ எந்த காலேஜ் படிக்கிற ? ", என்று
அவர் என்னிடம் உரிமையுடன் கேட்டார் . நானும் பொதுவாக
இல்லாமல் "CEG ல தான் படிக்கிறேன் " , என்று
தைரியமாக மறுமொழிந்தேன் . அவர் ஏதோ
நான் சொல்லகூடாதது சொன்னதுப் போல்
என்னை ஒரு விதமாக பார்த்து,
" அப்படி ஒரு காலேஜ் இருக்கா ? ", என்று கேட்க
அந்நொடியே என் தைரியம் அனைத்தும்
சில்லு சில்லாக நொறுங்க உணர்ந்தேன் .
பின் அதிர்ச்சியில் உறைந்த நான் சற்று
பயத்துடன் " அண்ணா யுனிவர்சிட்டி ",
என்றேன் ஓரிரண்டு மூச்சில் .
"அப்பா ! நீ அங்கயா படிக்கிற?
உன்னப் போய் தப்பா நெனச்சிட்டேனே!",
என்று அவர் கூற என் மனதில் ஒரு
எண்ணம் உதித்தது உடனடியாக.
" நா அப்படி ஒண்ணுமே செய்யலையே !",
என்றேன் என் மனதிடம் மெதுவாக.
"ஏன் அப்படி சொல்றீங்க ?",என்று கேட்டேன்
அவரிடம் , மனதில் ஒரு சலனுத்துடன் .
அவர் " அட என்னப்பா நீயே இப்படி கேட்ட !
உன் கல்லூரிய பத்தி நா சொல்லித்தான்
தெரியனுமா ? உன் கல்லூரியில் சேர்ந்தாலே
வேல நிச்சயம் கெடச்சிடுமே!
படிக்கும் போதே பட்டம் வாங்குற மூளை ,
இங்க சேர்ந்தாலே வாழ்க்கை மாறிவிடும்,
நாலு வருஷம் கழிச்சி உன்ன
கையில பிடிக்க முடியுமா ???
இத்தனைக்கும் நீ படிக்கிறது அரசு
கல்லூரியாச்சே காச பத்தி கவலையா உனக்கு !",
என்று ஒரு பூரித்த முகத்துடன் கூறினார் .
அந்நேரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் ஒன்றே !
வைகைப் புயல் வடிவேலு கூறுவது போல்
" இந்த உலகம் இன்னுமா நம்மல நம்புது ?",
என்று நகைத்தேன் உள்ளத்தினுள் .
ஆனால் அவர் கற்பனையில் உண்மையான ஒன்று
அரசு கல்லூரியில் சேர்ந்ததால் கட்டணம் பற்றி
பெரிதாக கவலை பட தேவையில்லை .
ஆனால், அப்போது வியந்தேன் நம் சமூகத்திற்கு
இவ்வளவு கற்பனைத்திறன் உள்ளதா என்று !
அதற்குள் அவர் மாவை கையில் கொடுத்துவிட்டார் .
நானும் வீட்டிற்கு திரும்ப முனைந்தேன் .
செல்லும் வழியில் யோசித்துப்பார்த்தேன் .
"நம்மில் சிலருக்கு பல்கலைக்கழகத்திற்கும்
கல்லூரிக்கும் வித்யாசம் தெரியவில்லையே !
மேலும் என் பல்கலையில் நான் படிக்கும்
கல்லூரியை சேர்த்து CEG, ACT, SAP என
மூன்று கல்லூரிகளுடன் கற்பக வனமாக திகழ்கிறது .
இதனை நம்மில் பலரும் அறிவாரோ ?
மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட
பட்ட படிப்புகளுடன் மையம் கொண்டுள்ளது
இவர்களுக்கு தெரியாதோ ?", " ஏதோ
இங்கு சேர்ந்தவுடன் உயர்வதுபோல்
நினைக்கிறார்கள் , படாத பாடு பட்டு
படிக்கும் நமது நிலை நாம் மட்டுமே அறிந்தது !".
சிலர் சொல்வதை போல் " சச்சினா இருந்தாலும்
சிக்ஸ் அடிச்சா தான் மரியாதை !".
இக்கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று
அவர்கள் அறியவேண்டும். ஆனால்,
பிற கல்லூரிகளை போல் எல்லா நேரமும்
பாடம் நடத்த மாட்டார்கள் , மாணவர்களின்
மனதை புரிந்து பல இடைவெளிகளில்
சில பாடங்கள் நடக்கும் . ஆனால் , இடைவெளிகள்
பல நாம் நமதாக்கினால் பலரை விட பல
மடங்கு படிக்கலாம் இந்த உலகில் .
பாட்டு, நடனம் , விளையாட்டு ஆகியவை
எல்லாம் மாணவர்களே கற்பிப்பர் ,
கற்றும் கொள்வர் என்பது இங்குள்ள தனிச்சிறப்பு .
மனம் மகிழுமாறு சில ஆச்சரியங்களுடன் ,
பல ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டே இருக்கும் .
கதிர் உதிர்க்கும் ஒளியினில் பல
வெயில் இங்கு விளையாத அளவிற்கு
அடர்ந்த காடாகவே தெரியும் மேலிருந்துப் பார்த்தால்.
அக்காட்டுக்குள் வாழும் நாங்கள் அனைவரும்
நாகரீகமடைந்த காட்டு வாசிகளே !
" கற்பிக்கும் கடலாகும் இது ,
கற்றுக்கொண்டே கரை சேரலாம் ", என்ற
எண்ணத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து
கதவைத் தட்டினேன் .கதவைத் திறந்த
அப்பா ," வாடா தண்டசோறு , ஏன் இவளோ
நேரம் ?", என்று கதைக்க சிதறிய பல
உணர்வுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன் .
- கிரிசேஷ் குமார்
நினைவுகளெல்லாம் நிஜமாகுமோ ?
இதனின் ஒரு எடுத்துக்காட்டாக என்
கல்லூரியின் கனவை பிறர் கூற நான்
என் செவியை இனிக்க விரும்பினேன்.
ஒரு நாள் இட்லி மாவு வாங்கி வர சென்றேன் ஒரு கடைக்கு.
இரு ஒரு கிலோவுக்கு மாவு மடிக்க சொன்னேன்.
அவர் ஏதோ என்னிடம் பல நாட்கள் பழகியது போல்
" என்னடா ஒரு திணிசாக கேட்கிற ?
நீ எந்த காலேஜ் படிக்கிற ? ", என்று
அவர் என்னிடம் உரிமையுடன் கேட்டார் . நானும் பொதுவாக
இல்லாமல் "CEG ல தான் படிக்கிறேன் " , என்று
தைரியமாக மறுமொழிந்தேன் . அவர் ஏதோ
நான் சொல்லகூடாதது சொன்னதுப் போல்
என்னை ஒரு விதமாக பார்த்து,
" அப்படி ஒரு காலேஜ் இருக்கா ? ", என்று கேட்க
அந்நொடியே என் தைரியம் அனைத்தும்
சில்லு சில்லாக நொறுங்க உணர்ந்தேன் .
பின் அதிர்ச்சியில் உறைந்த நான் சற்று
பயத்துடன் " அண்ணா யுனிவர்சிட்டி ",
என்றேன் ஓரிரண்டு மூச்சில் .
"அப்பா ! நீ அங்கயா படிக்கிற?
உன்னப் போய் தப்பா நெனச்சிட்டேனே!",
என்று அவர் கூற என் மனதில் ஒரு
எண்ணம் உதித்தது உடனடியாக.
" நா அப்படி ஒண்ணுமே செய்யலையே !",
என்றேன் என் மனதிடம் மெதுவாக.
"ஏன் அப்படி சொல்றீங்க ?",என்று கேட்டேன்
அவரிடம் , மனதில் ஒரு சலனுத்துடன் .
அவர் " அட என்னப்பா நீயே இப்படி கேட்ட !
உன் கல்லூரிய பத்தி நா சொல்லித்தான்
தெரியனுமா ? உன் கல்லூரியில் சேர்ந்தாலே
வேல நிச்சயம் கெடச்சிடுமே!
படிக்கும் போதே பட்டம் வாங்குற மூளை ,
இங்க சேர்ந்தாலே வாழ்க்கை மாறிவிடும்,
நாலு வருஷம் கழிச்சி உன்ன
கையில பிடிக்க முடியுமா ???
இத்தனைக்கும் நீ படிக்கிறது அரசு
கல்லூரியாச்சே காச பத்தி கவலையா உனக்கு !",
என்று ஒரு பூரித்த முகத்துடன் கூறினார் .
அந்நேரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் ஒன்றே !
வைகைப் புயல் வடிவேலு கூறுவது போல்
" இந்த உலகம் இன்னுமா நம்மல நம்புது ?",
என்று நகைத்தேன் உள்ளத்தினுள் .
ஆனால் அவர் கற்பனையில் உண்மையான ஒன்று
அரசு கல்லூரியில் சேர்ந்ததால் கட்டணம் பற்றி
பெரிதாக கவலை பட தேவையில்லை .
ஆனால், அப்போது வியந்தேன் நம் சமூகத்திற்கு
இவ்வளவு கற்பனைத்திறன் உள்ளதா என்று !
அதற்குள் அவர் மாவை கையில் கொடுத்துவிட்டார் .
நானும் வீட்டிற்கு திரும்ப முனைந்தேன் .
செல்லும் வழியில் யோசித்துப்பார்த்தேன் .
"நம்மில் சிலருக்கு பல்கலைக்கழகத்திற்கும்
கல்லூரிக்கும் வித்யாசம் தெரியவில்லையே !
மேலும் என் பல்கலையில் நான் படிக்கும்
கல்லூரியை சேர்த்து CEG, ACT, SAP என
மூன்று கல்லூரிகளுடன் கற்பக வனமாக திகழ்கிறது .
இதனை நம்மில் பலரும் அறிவாரோ ?
மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட
பட்ட படிப்புகளுடன் மையம் கொண்டுள்ளது
இவர்களுக்கு தெரியாதோ ?", " ஏதோ
இங்கு சேர்ந்தவுடன் உயர்வதுபோல்
நினைக்கிறார்கள் , படாத பாடு பட்டு
படிக்கும் நமது நிலை நாம் மட்டுமே அறிந்தது !".
சிலர் சொல்வதை போல் " சச்சினா இருந்தாலும்
சிக்ஸ் அடிச்சா தான் மரியாதை !".
இக்கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று
அவர்கள் அறியவேண்டும். ஆனால்,
பிற கல்லூரிகளை போல் எல்லா நேரமும்
பாடம் நடத்த மாட்டார்கள் , மாணவர்களின்
மனதை புரிந்து பல இடைவெளிகளில்
சில பாடங்கள் நடக்கும் . ஆனால் , இடைவெளிகள்
பல நாம் நமதாக்கினால் பலரை விட பல
மடங்கு படிக்கலாம் இந்த உலகில் .
பாட்டு, நடனம் , விளையாட்டு ஆகியவை
எல்லாம் மாணவர்களே கற்பிப்பர் ,
கற்றும் கொள்வர் என்பது இங்குள்ள தனிச்சிறப்பு .
மனம் மகிழுமாறு சில ஆச்சரியங்களுடன் ,
பல ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டே இருக்கும் .
கதிர் உதிர்க்கும் ஒளியினில் பல
வெயில் இங்கு விளையாத அளவிற்கு
அடர்ந்த காடாகவே தெரியும் மேலிருந்துப் பார்த்தால்.
அக்காட்டுக்குள் வாழும் நாங்கள் அனைவரும்
நாகரீகமடைந்த காட்டு வாசிகளே !
" கற்பிக்கும் கடலாகும் இது ,
கற்றுக்கொண்டே கரை சேரலாம் ", என்ற
எண்ணத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து
கதவைத் தட்டினேன் .கதவைத் திறந்த
அப்பா ," வாடா தண்டசோறு , ஏன் இவளோ
நேரம் ?", என்று கதைக்க சிதறிய பல
உணர்வுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன் .
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக